Archive for the ‘மகரிஷி கவிகள்’ Category

துறவு

Posted: ஓகஸ்ட் 7, 2010 in மகரிஷி கவிகள்

              "என் பிறப்பு என் இறப்பு
                   இரண்டையும் யானறியேன்
               எனினும் இவ்விரு நிகழ்ச்சி
                   என் உள்ளத்தில் கொண்டே
               பொன் முதலாய்ப் பொருளனைத்தும்
                   ஈட்டுகின்றேன் அவற்றைப்
               புவிவாழ்வின் இயல்பொக்கப்
                  பொதுநலமே கருதி
               நன்மை எனும் வழிகளிலே
                   வைத்துச் செலவாக்கி
               நற்சமயம் வாய்்க்குமெனில்
                  அனைத்தையும்நான் அளிப்பேன்
              இன்முகமும் இனிமையுமே
                   எனதுசெல்வம்; வீடோ
              ஏகவெளியென் றெண்ணி
                  யான்துறவு கொண்டேன்".

                                                    

பிழை போக்கித்தரம் உயர்த்தும் மனவளக்கலையை
        பேருலகமெல்லாம் பெற்று நலம் காண 
தழைத்த ஒரு நல்லெண்ணம் தக்கவலுப் பெற்று 
         தவப்பயிற்சி உடல்பயிற்சி தற்சோதனைகள்
பிழை நீக்கி முழு ஆயுள் பெறக் காயகல்பம்
        பிள்ளைகளும் குடும்பமும் நற்பேறு பெற்று துய்க்க 
அழைகின்றேன் உலகோர் அன்பின் பெருக்கத்தால் 
        அனைவருக்கும் பொது சொத்தாம் அறிவுக்கலை கொள்வீர். 



                                                                                       அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி 

இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி

    இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?

விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்

    வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை

அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்

    அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்

தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி

    சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.